நடராஜனின் பிறந்தநாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் அஜித்! வைரலாகும் புகைப்படம்

110

 

கிரிக்கெட் வீரர் நடராஜனின் பிறந்தநாளில் நடிகர் அஜித்குமார் நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

நடராஜன்
தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன், ஐபிஎல் தொடரில் தற்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் விளையாடி வருகிறார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நடராஜன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டினார். இந்த நிலையில் நடராஜன் தனது 33வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், நேற்று இரவு ஐதராபாத்தில் நடராஜனின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

அஜித்குமார் இன்ப அதிர்ச்சி
இதில் நடிகர் அஜித்குமார் எதிர்பாராத விதமாக கலந்துகொண்டு அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். பிறந்த நாள் கேக் வெட்டிய பின் நடராஜனுக்கு அதனை ஊட்டி அஜித்குமார் வாழ்த்து கூறினார்.

தற்போது இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 48 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள நடராஜன் 51 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE