நடாலுக்கு அதிர்ச்சி அளித்த ஆஸ்திரேலிய வைல்டு கார்டு வீரர்

454
டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரும், 14 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் தற்போது நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், தன்னைவிட தரநிலையில் மிகவும் பின்தங்கியிருக்கும் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்ஜியாசிடம் (வயது 19) அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

உலகத் தரவரிசையில் 144-வது இடத்தில் இருக்கும் நிக் கிர்ஜியாஸ், வைல்டு கார்டு எனப்படும் சிறப்பு அனுமதியில் முதல் முறையாக விம்பிள்டன் பிரதான சுற்றுக்கு நுழைந்தவர். இவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடாலுக்கு கடும் சவாலாக விளங்கினார்.

நடாலின் ஒவ்வொரு சர்வீசையும் தடுத்த கிர்ஜியாஸ் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு 7-6(5), 5-7, 7-6(5), 6-3 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார். கடந்த 10 ஆண்டுகளில் வைல்டு கார்டு வீரர் ஒருவர் காலிறுதிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும். அத்துடன், 1992க்குப் பிறகு தரவரிசையில் 100க்கு வெளியில் உள்ள வீரர் ஒருவர் முதல்நிலை வீரரை வீழ்த்தியிருக்கிறார்.

SHARE