நடிகர் செவ்வாழை ராசு காலமானார்

25
பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் செவ்வாழை ராசு, இவருக்கு வயது 70 பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் நடித்த செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமானார்.
கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் பொணந்திண்ணி என்ற கதாபாத்திரம் நடித்தன் மூலம் புகழ் பெற்ற செவ்வாழை ராசு, மைனா, கிழக்குச் சீமையிலே, கந்தசாமி உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

SHARE