நயன்தாராக்கு ரஜினி கொடுத்த ஷாக்!!!

537

தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகி நயன்தாரா. ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த பல ஹீரோயின்கள் தற்போது சிட்டு குருவி போல் இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்ட நிலையில், நடிப்பிற்கு டாட்டா சொல்லிவிட்டு போன நயன் காதல் தோல்வியால் “நான் மீண்டும் நடிக்க போகிறேன்” என்று களத்தில் குதித்தார்.

இவர் நடித்த “ராஜா ராணி”, “ஆரம்பம்” என ரீ என்ட்ரியில் தொடர்ந்து ஹிட் அடிக்க இவர் காட்டில் படம்+பணம் மழை தான். தற்போது சூர்யாவுடன் ஒரு படம், நன்பேண்டா, என பிஸியாக நடித்து கொண்டு இருக்க நம்ம சூப்பர் ஸ்டார் நடிக்கும் “லிங்கா” படத்தில் நடிக்க அழைப்பு வந்து இருக்கிறதாம்.

ஏற்கனவே “சந்திரமுகி”யில் இவர் ரஜினியுடன் நடித்து இருந்தார் அதை தொடர்ந்து “சிவாஜி” ஒரு பாடல், “குசேலன்” என சூப்பர் ஸ்டாரின் ஹாட்ரிக் கதாநாயகி ஆனார் நயன். தற்போது “லிங்கா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட அழைக்க, தலைவர் படம் என்பதால் மறுபேச்சு இல்லாமல் ஓகே சொல்லி விட்டாராம். இதற்காக ஒரு பெரிய தொகையை அட்வான்ஸாக வாங்க இருக்கிறார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

“மறுபடியும் பல்லே லக்கவா!!!”

 

SHARE