நயன்தாராவின் வாழ்க்கை படமாகிறதா?

435

நயன்தாராவின் வாழ்க்கையினை படமாக்க ஒரு புதுமுக இயக்குனர் முடிவு செய்துள்ளாராம்.

அதாவது சிம்பு மற்றும் பிரபுதேவா ஆகியோருடன் நயன்தாரா கொண்ட காதல் ஆகியவற்றை வைத்து படம் இயக்க ஒரு இயக்குனர் நயன்தாராவை அணுகியுள்ளார். ஆனால் நயன்தாராவோ இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் அனாமிகா படத்தின் சில நிகழ்ச்சிகளுக்கு நயன்தாரா போகாததால் பல பிரச்சனைகளுக்கு ஆளாகினார். அப்படத்தின் இயக்குனர் சேகர் கம்முல்யாவுக்கும், நயன்தாராவுக்கும் சில மோதல்கள் ஏற்பட்டது. பின் நாளடைவில் அந்த செய்தி மறைந்துவிட்டது.

இப்போது சமீபத்தில் கூட இவரின் முன்னால் காதலனான சிம்புவுடன் நயன்தாரா நின்று கொண்டிருப்பது போல் ஒரு புகைப்படம் வெளிவந்தது.

இதனால் மறுபடியும் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா என்ற கேள்விகளும் வந்ததை தொடர்ந்து இந்த நேரத்தில் நயன்தாராவில் வாழ்க்கையை படமாக எடுத்தால் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதால் புதுமுக இயக்குநர் நயன்தாராவை அனுகியுள்ளார்.

ஆனால் கோபம் கொண்ட நயன்தாரா இதனை மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

SHARE