இலங்கையில் மகிந்தராஜபக்ஷ ஜனாதிபதியாக இருப்பதையும், அவரது குடும்பத்தினர் முக்கிய பதவிகளை வகிப்பதையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி விரும்பவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நரேந்திர மோடியுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ள ராஜதந்திரி ஒருவர் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கடந்த மாதம் 27ம் திகதி இருவருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது.
இதன் போது மகிந்தராஜபக்ஷ தொடர்பில் நரேந்திரமோடிக்கு நல்ல அபிப்ராயம் ஏற்பட வில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும் மகிந்தராஜபக்ஷவும், அவரது சகோதரர்களும் சேர்ந்து,
இலங்கையை சீரழித்துவிட்டார்கள் என்று மோடி கருதுகிறார். மோடி தமது குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதற்கு எதிரானவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்படுமாக இருந்தால், அதற்கு இந்திய பிரதமரும் ஒத்துழைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.