நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதியை சந்திப்பாரா என்பது குறித்து புதுடில்லியில் சந்தேகம்

389

 

நியூயோர்க்கில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு இலங்கை ஜனாதிபதியை சந்திப்பாரா என்பது குறித்து புதுடில்லியில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக பொதுநலவாய தலைவர்களின் மாநாடொன்று நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது. பொதுநலவாயத்தின் சீர்திருத்த நடவடிக்கைகள் உட்பட பல விடயங்கள் குறித்து விவாதிக்கவுள்ள இந்த மாநாட்டுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமை தாங்குகிறார். எனினும் இந்திய பிரதமர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார். பதிலாக இந்திய வெளிவிவகார அமைச்சரே கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் 27ஆம் திகதி பொதுச்சபையில் உரையாற்றவுள்ளார் என்றும், செப்ரெம்பர் 29,30 ஆம் திகதிகளில் அமெரிக்க ஜனாதிபதியை அவர் சந்திப்பார் என்றும் புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை ஜனாதிபதி மஹிந்த, அமெரிக்காவில் எத்தனை நாட்கள் தங்கியிருப்பார் என்பது அறிவிக்கப்படவில்லை. அவர் செப்ரெம்பர் 25 ஆம் திகதி உரையாற்றுவார் என்று மாத்திரமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய பிரதமரை சந்திப்பதற்கு மஹிநதவுக்கு வாய்புக்கள் இருக்காது என்றே புதுடில்லித்தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE