நாட்டுமக்களை காக்க உக்ரைன் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

30

 

ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நிகழ்த்தலாம் என்ற அச்சத்தில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் பொதுமக்களுக்கு அணுக்கதிர் வீச்சை தடுக்கக்கூடிய மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

அந்த மாத்திரைகளில் பொட்டாஷியம் அயோடைடு என்னும் ரசாயனம் உள்ளது. அணுகுண்டு வெடித்தால் வெளியாகும் சிலவகை கதிர் வீச்சுகளை மனித உடலில் உள்ள தைராய்டு சுரப்பிகள் உறிஞ்சுவதை இந்த ரசாயனம் தடுக்கும்.

ஆனால், அணுக்கதிர் வீச்சு உருவாகுவதற்கு முன்பு அல்லது, அணுக்கதிர் வீச்சு உடலில் பட்ட உடனே இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.

இந்நிலையில், உக்ரைன் எல்லைக்கருகிலிருக்கும் போலந்து நாட்டிலும், அதிகாரிகள் பள்ளிகளில் இந்த பொட்டாஷியம் அயோடைடு மாத்திரைகளை விநியோகிக்கத் துவங்கிவிட்டதாக ட்விட்டரில் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE