நாட்டை என்னிடம் தாருங்கள் அபிவிருத்தி செய்து காட்டுகிறேன்: தழிழ் இனத்தை கொன்று ஒழித்த அடுத்த கள்ளன் பொன்சேகா சவால்

343
நாட்டை என்னிடம் தாருங்கள் அபிவிருத்தி செய்து காட்டுகிறேன்:  தழிழ் இனத்தை கொன்று ஒழித்த அடுத்த கள்ளன் பொன்சேகா சவால்
1xfwqsjlbdw2itiw2zdvvq55_P5-600
நாட்டை தன்னிடம் ஒப்படைத்தால், மூன்று வருடங்களில் சகல துறைகளிலும் அபிவிருத்தி செய்து காட்டுவதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தனமல்வில பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ஷவின் ஊழல் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள், கடந்த மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கு இரண்டு லட்சத்து 75 ஆயிரம் வாக்குகளை வழங்கி ஆசிர்வாதம் செய்தனர்.

அந்த மாகாணங்களில் தமது ஆசிர்வாதத்தை ஆரம்பித்த மக்கள் ஊவா மாகாண சபைத் தேர்தலில் அதனை இரண்டு முதல் மூன்று மடங்காக அதிகரிக்கவுள்ளனர்.

நாட்டை அபிவிருத்தி செய்ய ஏழெட்டு வருடங்கள் தேவையில்லை, மூன்று வருடங்களில் மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்ப முடியும்.

30 வருடங்கள் நடைபெற்ற யுத்தத்தை 33 மாதங்களில் முடிவுக்கு கொண்டு வந்தது போல், நாட்டில் சட்டத்தையும், நியாயத்தை ஏற்படுத்தி, நாட்டு மக்களின் பொருளாதாரத்தை அதிகரிக்க எமக்கு மூன்று வருடங்கள் போதுமானது.

ஹம்பாந்தோட்டை மீட்கப்படாத பிரதேசம் போன்றது. அந்த பிரதேசத்தை குண்டர்களே ஆட்சி செய்து வருகின்றனர்.

கசினோ, சூதாட்டம், எதனோல், ஹெரோயின் போதைப்பொருட்களை அமைச்சர்களே கொண்டு வருகின்றனர்.

கோதுமை மா இறக்குமதி செய்யப்படுவது போல் இலங்கைக்குள் ஹெரோயின் கொண்டு வரப்படுகிறது. சமூகம் சீரழிந்து, குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE