நாட்டை விட்டு ரஷ்ய தூதுவரை வெளியேற்ற ஆராய்ந்து வரும் அவுஸ்திரேலியா!

13

 

உக்ரேனிற்கு எதிராக அணுவாயுத தாக்குதல் நடத்தப்படலாம் என ரஷ்ய ஜனாதிபதி எச்சரித்துள்ளதை தொடர்ந்து அவுஸ்திரேலியா தனது நாட்டிற்கான ரஷ்ய தூதுவரை வெளியேற்றுவது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது என வெளிவிவகார அமைச்சர் பெனி வொங் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் கருத்துக்களை தெரிவிப்பதை அதிகரித்துள்ளதை தொடர்ந்து உக்ரேனிற்கு மேலதிக இராணுவ உதவியை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பாதுகாப்பு மற்றும் விநியோகங்களில் காணப்படும் பிரச்சினைகளால் ஆயுத உதவியை வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் அச்சுறுத்தல் நினைத்துப்பார்க்க முடியாததது பொறுப்பற்றது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புடின் ரஷ்யாவின் ஆள்புல ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாக தெரிவிப்பது உண்மையில்லை போலியான சர்வஜன வாக்கெடுப்பு எதுவும் அதனை உண்மையாக்காது என குறிப்பிட்டுள்ள பெனி வொங், சட்டவிரோதமான ஒழுக்கக்கேடான யுத்தத்திற்கு ரஷ்யா மாத்திரமே பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.ரஷ்யா உடனடியாக உக்ரைனிலிருந்து தனது படைகளை விலக்கிக்கொள்ளவேண்டும்.

உக்ரேனிற்கு எதிரான தனது சட்டவிரோத ஒழுக்கநெறியற்ற ஆக்கிரமிப்பை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE