நான் எப்படி இந்த சமூக வலைத்தளங்களை தடை செய்வேன்-‘ஜனாதிபதி

489
mahinda-rajapaksa-2010-9-23-11-51-49_zps73f148ad
ஒரேபார்வையில் டுவீற்றரில் மகிந்த - சமூக வலைத் தளங்களைத் தடை செய்தால் எனது வீட்டில் புரட்சி ஏற்படும்:

சமூக வலைத்தளங்களை தடை செய்தால் எனது வீட்டில் புரட்சி ஏற்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களான முகப்புத்தகம் (பேஸ்புக்) மற்றும் டுவிட்டர் ஆகியவற்றை இலங்கையில் தடை செய்யும் நோக்கம் உள்ளதா? என டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, ‘பேஸ்புக் தளத்தில் எனக்கு 300 ஆயிரம் விருப்பங்கள் உள்ளன. டுவிட்டரில் 25 ஆயிரம் பின்தொடர்பவர்களைத் தாண்டியுள்ளேன். இவ்வாறானதொரு நிலையில், நான் எப்படி இந்த சமூக வலைத்தளங்களை தடை செய்வேன்’ என்றார்.
அத்துடன், ‘இந்த சமூக வலைத்தளங்களை நான் தடை செய்தால் வீட்டில் எனது மகன்களிடமிருந்தே நான் ஒரு புரட்சியை எதிர்நோக்க நேரிடும்’ என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சட்டக்கல்லூரி விவகாரத்திற்கு விரைவில் தீர்வு: ஜனாதிபதி
சட்டக்கல்லூரி விவகாரம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும்  இந்;த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதிலளித்துள்ளார்.
டுவிட்டர் சமூக வலைத்தளத்தினூடாக கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே ஜனாதிபதி மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
சட்டக் கல்லூரியின் இறுதி பரீட்சைக்குக்கு முப்பது வயதுக்கு மேற்பட்டோர் தோற்றுவதை தடை செய்வதற்கு சட்டக் கல்வி சபை பரிசீலித்து வருவதாகவும் இந்த நடைமுறை  2014ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தவிருப்பதாகவும் வெளியான தகவல்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

வட, கிழக்கில் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்துள்ளோம்: ஜனாதிபதி:-
நாட்டில் நிலவிய பயங்கரவாதம், வடக்கு கிழக்கு இளைஞர், யுவதிகளின் உரிமைகள் அனைத்தையும் பறித்துவிட்டது. நாம் அவர்களின் உரிமைகளை மீட்டெடுத்துள்ளோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
டுவிட்டர் சமூக வலைத்தளத்தினூடான கேள்விகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது பதிலளித்து வருகின்றார்.

இதன்போது, ‘யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளின் குறிப்பான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உங்களது அரசாங்கத்தின் கொள்கைகள் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன?’ என்று ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு பதிலளிக்கும் பொதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இக்கேள்விக்கு தொடர்ந்தும் பதிலளித்த ஜனாதிபதி, ‘கடந்த 2013ஆம் ஆண்டில் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் வடக்கிலிருந்து சிறந்த பெறுபேறுகள் கிடைத்தன. இதுவே, நாம் அவர்களுக்காக முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு கிடைத்த சிறந்த பெறுபேறாகும்’ என்றார்.
அத்துடன், ‘வடக்கிலுள்ள இளைஞர், யுவதிகளுக்காக தகவல் தொழில்நுட்ப கூடம் உள்ளிட்ட  தெற்குப் பாடசாலைகளில் காணப்படும் சகல வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன’ என்றும் ஜனாதிபதி தனது பதிலைப் பதிவு செய்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற மஹாபொல புலமைப்பரிசில் பணத்தொகையினை அதிகரிப்பது தொடர்பில் அதிகூடிய கவனம் எடுத்துவருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் சமூக வலைத்தளத்தினூடாக கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே ஜனாதிபதி மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் தொகையாக ரூபா 2500 கடந்த 2006ஆம் ஆண்டுதொடக்கம் வழங்கப்பட்டுவருகிறது. இதனை அதிகரிக்க முடியாத என கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

எமது அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டத்தினை தயாரிக்கின்றபோது இளைஞர், யுவதிகளின் கருத்துக்கு முதலிடம் வழங்கிவருகின்றோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் சமூக வலைத்தளத்தினூடாக கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே ஜனாதிபதி மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
‘எமது அரசாங்கத்தில்தான் ஏராளமான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல் நாட்டின் ஏனைய உயர்மட்ட நடவடிக்கைகளிலும் இளைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கு நல்ல உதாரணம் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள். அதுமட்டுமல்லாமல், ஏராளமான பெண்கள் அமைப்புகள் எமக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். அதனையும் நாங்கள் கவனத்திற்கொண்டு நடைமுறைப்படுத்தி வருகிறோம்’ எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE