நான் ஒரு போதும் முஸ்லிம்களை காட்டிக் கொடுத்தவன் அல்ல-அஸ்வர் எம்.பி.

422
என்னை கொலை செய்வதன் மூலம்தான் முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றால் அதனை தாராளமாக செய்யலாம் என்று ஆளும்கட்சி எம்.பி.யான ஏ.எச்.எம். அஸ்வர் இன்று பாராளுமன்றத்தில் சூளுரைத்தார்.

வெளிநாடுகளில் இருக்கின்ற கொழுத்த உடல்களைக் கொண்டுள்ள சில முஸ்லிம்கள் எஸ்.எம்.எஸ். ஊடாகவும் தொலைபேசி அழைப்புக்கள் ஊடாகவும் என்னை கொலை செய்வதாக அச்சுறுத்துகின்றனர்.

இத்தகைய அலுகோசுகளும் எமது சமுதாயத்தில்தான் இருக்கின்றனர். நான் ஒரு முஸ்லிம் என்பதை உறுதிப்படுத்துகிறேன். ஒருபோதும் முஸ்லிம்களை காட்டிக் கொடுக்கமாட்டேன்.

அவ்வாறாக என்னை கொலை செய்வதன் மூலம்தான் முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றால் அதனை தாராளமாக செய்யலாம்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை அமர்வின் போது இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அஸ்வர் எம்.பி. அங்கு மேலும் கூறுகையில்,

சமகாலத்தில் என் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நான் அறுபது ஆண்டு கால அரசியல் அனுபவத்தை கொண்டிருக்கிறேன். 1989 ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு வருகை தந்தேன். எனது முற்காலத்து அரசியல் செயற்பாடுகள் சேவைகள் தொடர்பில் தற்போதுள்ள சமுதாயம் அறிந்திருக்க முடியாது. நான் ஒரு முஸ்லிம் என்பதை உறுதிப்படுத்தி வருகிறேன்.

பேருவளையில் ஒவ்வொரு பகுதியிலும் எனது பாதங்கள் படாத இடம் இருக்க முடியாது. அங்குள்ள மக்களுக்கு நியாயமான சேவைகளை ஆற்றியிருக்கிறேன்.

thumb

எனினும், தற்போது இரவு வேளைகளில் எனக்கு எஸ்.எம்.எஸ். ஊடாகவும் தொலைபேசி அழைப்புக்கள் ஏற்படுத்தியும் கொலை மிரட்டல்களை விடுக்கின்றனர். நான் ஒரு போதும் முஸ்லிம்களை காட்டிக் கொடுத்தவன் அல்ல.

கொழுத்த உடல்களை வைத்துக்கொண்டு வெளிநாடுகளில் இருக்கின்ற சில முஸ்லிம்கள் எனக்கு தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி உன்னை கொலை செய்வேன் என்று கூறுகின்றனர். இவ்வாறான அலுக்கோசுக்களும் எமது சமுதாயத்தில்தான் இருக்கின்றனர்.

என்னை கொலை செய்வதன் மூலம்தான் முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமென்றால் அதனைத் தாராளமாக செய்யுங்கள். இவ்வாறான விமர்சனங்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் நிந்தனைகளால் எனது பாவம் கழியப்படுகின்றன.

untitled19

பொது பலசேனா அல்ல வேறு எந்த சேனாவாக இருந்தாலும் பேருவளை வன்முறைச் சம்பவங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். நான் முஸ்லிம்களுக்காவே குரல் கொடுதது வருகிறேன். இந்த பாராளுமன்றத்தில் நான் இல்லாமல் போனாலும் பாராளுமன்றத்திற்கு வெளியில் இருந்து முஸ்லிம்களுக்காக இறுதி மூச்சுவரை போராடுவேன்.

மேலும், என்னை நிந்திப்பவர்களையும் விமர்சிப்பவர்களையும் அல்லாஹ் மன்னிப்பானாக என்றார்.

 

SHARE