நான் ரெடி நீங்க ரெடியா? அஞ்சலி தவிப்பு

500
                தமிழ் சினிமாவில் நல்ல நடிகை என்று பெயர் எடுத்தவர் அஞ்சலி. அவர் நடித்த கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் அவரின் கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. தமிழ் சினிமாவிற்கு ஒரு திறமையான நடிகை கிடைத்துள்ளார் என்ற நம்பிக்கையை அஞ்சலி ஏற்படுத்தினார். போட்டி அதிகரிக்க, என்ன செய்வது என தெரியாமல் கவர்ச்சியை கையில் எடுத்தார் அஞ்சலி. அது அவருக்கு கைகொடுக்காமலே போனது.
தன் குடும்ப விஷயங்களால் ஏற்பட்ட குழப்பத்தால் ஆந்திராவிற்கு ஓட்டமெடுத்தார் அஞ்சலி. ஆந்திராவில் வெங்கடேஷ், ரவிதேஜா என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வெற்றியக் கொடுத்தாலும், தற்போது படவாய்ப்புகள் இல்லாத நிலைதான் இருக்கிறது அஞ்சலிக்கு.
கன்னடத்தில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகின. தனக்கான மாட்க்கெட் இல்லை என்று தெரிந்துகொண்ட அஞ்சலி, ஒரு பாடலுக்கு நடனமாடவும் தயாராக இருப்பதை தயாரிப்பாளர்கள் தரப்புக்கு தெரிவித்திருக்கிறாராம். இந்தி நடிகைகளைவிடவும் அதிகமாக கவர்ச்சியில் தாராளம் காட்டி நடிப்பேன் என்று உறுதியளித்திருக்கும் அஞ்சலி ஒரு பாடலுக்கு 2கோடி சம்பளம் கேட்கிறாராம்.
கவர்ச்சிக்கு நான் ரெடி… சம்பளம் கொடுக்க நீங்க ரெடியா? என கேட்கும் அஞ்சலி இதற்கு முன்பாக சூர்யாவுடன் சிங்கம் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
SHARE