நியூசிலாந்து எதிராக சதம் விளாசிய இளம் கேப்டன்! 205 ரன்கள் முன்னிலை

95

 

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் வங்கதேச அணி 205 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

சில்ஹெட் டெஸ்ட்
வங்கதேசம், நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹெட்டில் (Sylhet) நடந்து வருகிறது.

வங்கதேசம் முதல் இன்னிங்சில் 310 ஓட்டங்களும், நியூசிலாந்து 317 ஓட்டங்களும் எடுத்தன. இதனைத் தொடர்ந்து வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. 26 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை வங்கதேசம் இழந்தது.

அடுத்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஷாண்டோ (Najmul Shanto) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் இணைந்து ஆடிய மொமினுல் ஹயூ (Mominul Haque) 40 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.

ஷாண்டோ சதம்
அதன் பின்னர் முஷ்பிகுர் ரஹிம், ஷாண்டோ இருவரும் கைகோர்த்தனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாண்டோ சதம் விளாசினார். இது அவருக்கு 5வது டெஸ்ட் சதம் ஆகும்.

மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் 3 விக்கெட் இழப்புக்கு 212 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் 205 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஷாண்டோ 104 ஓட்டங்களுடனும், ரஹிம் 43 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

SHARE