நியூசிலாந்தை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாறு படைத்த வங்கதேசம்! சாதித்த ஒற்றை வீரர்

74

 

வங்கதேச அணி முதல் டெஸ்டில் நியூசிலாந்தை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.

பயத்தை காட்டிய டைஜுல் இஸ்லாம்
சில்ஹெட்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் நிர்ணயித்த 332 ஓட்டங்கள் இலக்கை நோக்கி நியூசிலாந்து ஆடியது.

நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 113 ஓட்டங்கள் எடுத்திருந்தது. டேர்ல் மிட்செல் 44 ஓட்டங்களுடனும், சோதி 7 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. அரைசதம் அடித்த மிட்செல் 58 ஓட்டங்கள் எடுத்த நிலையில், நயீம் ஹசன் ஓவரில் டைஜுல் இஸ்லாமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து வந்த கேப்டன் சௌதீ அதிரடி காட்டினார். மறுமுனையில் சோதி பொறுமையை கடைபிடித்தார். சௌதீ 24 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 34 ஓட்டங்களில் இருந்தபோது ஸஹிர் ஹசனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

சுருண்ட நியூசிலாந்து
அடுத்து சோதியும் 22 ஓட்டங்களில் அவுட் ஆக நியூசிலாந்து அணி 181 ஓட்டங்களுக்கு சுருண்டது. பந்துவீச்சில் பயத்தை காட்டிய டைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்கள் கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் முதல் முறையாக சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியை வீழ்ந்தி வங்கதேசம் வரலாற்று சாதனை படைத்துள்ளது.

SHARE