நியூயார்க் நகரில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் கூட்டத்தில் மோடி பேசுகிறார்

382
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அழைப்பை ஏற்று அடுத்த மாதம் (செப்டம்பர்) அமெரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ‘வெளிநாட்டு வாழ் பாரதீய ஜனதா நண்பர்கள்’ அமைப்பு ஏற்பாடு செய்து உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மாடிசன் கார்டன் வளாக திடலில் ஆயிரக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச இருப்பதாக அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

SHARE