நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர் வீரவாகு கனகசுந்தர சுவாமி (வயது-67)இன்று செவ்வாய்க்கிழமை(17) மாலை உயிரிழந்;துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.
நீண்டகாலமாக புற்று நோயினால் பாதீக்கப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த புதுக்குடியிறுப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினரான வீரவாகு கனகசுந்தர சுவாமி (வயது-67) இன்று செவ்வாய்க்கிழமை(17) கடும் சுகவீனம் காரணமாக வவுனியா தனியார் வைத்தியசாலையில் இருந்து யாழ்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது அவர் இன்று(17) செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் மேலும் தெரிவித்தார்.
இவர் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் கிராம சேவையாளராக கடமையாற்றி ஓய்வு பெற்ற பின்னார் கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இடம் பெற்ற முதலாவது வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின்; சார்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
இவர் கடந்த காலங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு பொது அமைப்புக்களின் ஊடாக பல்வேறு சமூக சேவைகளையும் மேற்கொண்டு மக்களின் நன்மதிப்பையும் கௌரவத்தையும் பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது இருதி கிரிகைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் மேலும் தெரிவித்தார்.