நேபாள நாட்டின் முன்னாள் மன்னர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி

365
நேபாள நாட்டின் முன்னாள் மன்னரும், மன்னர் வம்சத்தின் கடைசி அரசருமான ஞானேந்திர ஷாவுக்கு நேற்று இரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நார்விக் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவரது நிலை ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டது என்று அவரை கவனித்துவரும் டாக்டர் பரத் ரவத் தெரிவித்துள்ளார். மன்னரின் உடல்நிலை பற்றிய செய்தி அறிந்ததும் நூற்றுக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் இன்று மருத்துவமனையின் முன்னால் கூடினர். கடந்த 2001ஆம் ஆண்டில் நேபாள மன்னர் மாளிகையில் நடைபெற்ற படுகொலைகளைத் தொடர்ந்து ஞானேந்திரா மன்னர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

ஆனால் பொதுமக்களிடையே பிரபலமாக விளங்காத நிலையில் அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களினால் இவர் தனது அதிகாரத்தைக் கைவிட நேர்ந்தது.கடந்த 2008ஆம் ஆண்டில் நூற்றாண்டுகளுக்கும் மேலாக அங்கு செயல்பட்டுவந்த பழமையான முடியாட்சி கலைக்கப்பட்டு குடியரசு ஆட்சி அமலுக்குக் கொண்டுவரப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE