நேற்று நடைபெற்ற தேர்தலில் சிறந்த பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

809

 

anura4

பத்தரமுல்லையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் சட்டவிரோத செயல்களுக்கு சிறந்த பாடத்தை கற்பித்துள்ள மக்கள் ஜே.வி.பி மேலே தூக்கி நிறுத்தியுள்ளனர்.

அரசாங்கம் தனது அரசியல் திட்டத்திற்கு அமைய ஜெனிவா பிரச்சினையை தனக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சித்த போதிலும் அது தோல்வியடைந்துள்ளது.

கொழும்பு மாவட்ட மக்களில் 55 வீதமானவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

தென் மாகாணத்தில் அரசாங்கத்தின் வாக்கு வங்கி 9 வீதமாக குறைவடைந்துள்ளது.

அம்பாந்தோட்டையில் அதிகளவான ஆசனங்களை அரசாங்கம் கைப்பற்றியிருந்தாலும் வாக்கு வீதம் குறைந்துள்ளது.

ஜே.வி.பியை விட்டு விலகிய சகலரையும் மீண்டும் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாகவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

– See more at: http://www.eelawin.com/show-RUmsyDQULWix5.html#sthash.WNqub4rH.dpuf

SHARE