நைஜீரியா நாட்டில் எபோலா நோய் தாக்கியவருக்கு சிக்சை அளித்த நர்சு சாவு

410

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா எனும் நோய் தாக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

நைஜீரியா, லைபீரியா, கினியா, சியாரோலோன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த நோய் தாக்கியுள்ளது.

நோயை கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாடுகள் தவிக்கின்றன. நோய்க்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளையும் நோய் தொற்றிக்கொள்கிறது. நைஜீரியாவில் எபோலா நோய்க்கு சிகிச்சை அளித்த நர்சு ஒருவரை நோய் தாக்கியது. அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நர்சு பலியானார்.

லைபீரியா நாட்டைதான் இந்த நோய் மிக மோசமாக தாக்கியுள்ளது. அங்கு இதுவரை 900 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோரை நோய் தாக்கியுள்ளது. நோய் பரவுதல் மேலும் அதிகரித்து வருவதால் அந்த நாட்டில் அவசரநிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.

நோயை குணப்படுத்த உரிய மருந்துகள் இல்லை. எனவே என்ன செய்வதென்று தெரியாமல் ஆப்பிரிக்க நாடுகள் தவித்து வருகின்றன.

SHARE