பத்திரிகையாளரை விடுவிக்க பிரதமர் முயலவில்லை – கண்ணீர் சிந்தும் குடும்பத்தினர்

402
எகிப்திய சிறையில் வைக்கப்பட்டுள்ள கனடிய பத்திரிகையாளர் வழக்கை, அந்நாட்டின் அரசாங்கம் கையாளும் முறையினால் தாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.கனடிய பத்திரிகையாளர் மொகமட் வாஹ்மி கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக எகிப்திய சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு பெப்ரவரி மாதம் 12ம் திகதி மறுவிசாரணைக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தி கேட்ட அவரது குடும்பத்தினர் கனடிய அரசாங்கம் இந்த வழக்கை கையாளும் முறையினால் தாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கை கையாள்வதில் கனடிய அரசாங்கத்தின் பழமைவாத அணுகுமுறை எங்களை கைவிட்டு விட்டது என குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

SHARE