பளுதூக்குதல் போட்டியில் சாதனை படைத்த வவுனியா மாணவிகள்

31

 

தேசிய மட்ட பளுதூக்குதல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

காலி போத்திவெல தேசிய பாடசாலையில் நடைபெற்ற இளையோர், கனிஷ்ட மற்றும் சிரேஸ்ட பிரிவினர்களுக்கு இடையிலான பளுதூக்கும் போட்டியானது இம்மாதம் 23,24,25 ஆகிய தினங்களில் நடைபெற்றன.

குறித்த போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் இருவர் தங்கப்பதக்கமும், ஒரு வெள்ளிப் பதக்கமும், ஒரு வெண்கல பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.

முதலாம் இடம்
இதன்படி பா.கிசாளினி 49 kg எடைபிரிவில் 80 kg எடையைதூக்கி முதலாம் இடத்தையும், த.வன்சிகா 44kg எடைபிரிவில் 64kg தூக்கி முதலாம் இடத்தையும், க.அபிசாளினி 81kg எடைபிரிவில் 70 kg தூக்கி இரண்டாம் இடத்தையும் , ச.அனுஷா 59kg எடைபிரிவில் 61 kg எடையை தூக்கி மூன்றாம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

குறித்த வீராங்கனைகளுக்கு ஞானஜீவன் ஆசிரியர் பயிற்சியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE