பவதாரணியுடன் இணைந்து பாடிய ஜீ.வி.பிரகாஷ் குமார்!

397

வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜீ.வி.பிரகாஷ்குமார். குறுகிய காலத்திலேயே முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்த ஜீ.வி., தற்போது தயாரிப்பாளர், ஹீரோ என்று வளர்ந்து கொண்டே செல்கிறார். தற்போது இவர் அதர்வா, ப்ரியா ஆனந்த் நடித்துள்ள இரும்புக்குதிரை படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு தனியார் எப்.எம். ஒன்றில் இன்று வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அதர்வா, ப்ரியா ஆனந்த், ராய் லட்சுமி(லட்சுமிராய்), ஜீ.வி.பிரகாஷ், இயக்குநர் யுவராஜ்போஸ் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜீ.வி.பிரகாஷ்குமார், ”இரும்புக்குதிரை” படத்தில், கவிஞர் தாமரை எழுதிய ”பெண்ணே பெண்ணே அன்றிலாகி கரைகிறேன்…” என்று தொடங்கும் பாடலை பவதாரணியுடன் இணைந்து பாடியுள்ளேன். முதன்முறையாக பவதாரணியுடன் பாடியது புதிய அனுபவத்தையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. இரும்புக்குதிரை படம் பைக்ரேஸை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் என்பதால் புதிய இசை கருவிகள் மூலம் பல புதுமையான இசைகளை இப்படத்தில் புகுத்தியுள்ளேன், ரசிகர்கள் இது ஒரு புதிய அனுபவத்தை தரும் என்றார்.
SHARE