பாகிஸ்தானின் உயர்மட்டஇராணுவ அதிகாரி ஒருவர் சிறிலங்காவுக்கு வரும் திங்கட்கிழமை பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

729

பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் கூட்டுத் தலைமை அதிகாரிகள் குழுவின் தலைவர் ஜெனரல் ரசாட் மஹ்மூட் வரும் 7ம் நாள் தொடக்கம் 11ம் நாள் வரை சிறிலங்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

“பாகிஸ்தான் சிறிலங்கா இடையிலான நெருக்கமான இராணுவ உறவுகளின் வெளிப்பாடாகவே இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.

கடந்த நவம்பரில் பாகிஸ்தான் படைகளின் கூட்டுத் தலைமை அதிகாரிகள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர், இவர் மேற்கோள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

சிறிலங்காவும் பாகிஸ்தானும் பயிற்சி மற்றும் எல்லா செயற்பாடுகளிலும் மிகவும் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளன.

அண்மைக்காலத்தில் இந்தப் பயிற்சி உறவுகளில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஜெனரல் மஹ்மூட் சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது யாழ்ப்பாணம், அனுராதபுர, தியத்தலாவ பகுதிகளுக்கும் செல்லவுள்ளார்.

SHARE