பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளரான வக்கார் யூனிஸ்

711
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் பதவி ஏற்கவுள்ளார்.பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த டேவ் வாட்மோரின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, புதிய பயிற்சியாளர் தேடுதல் வேட்டையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரப்படுத்தியது.

இப்பொறுப்புக்கு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிசும் விண்ணப்பித்து இருந்தார். இந்நிலையில் வக்கார் யூனிஸ் பாகிஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து வக்கார் யூனிசும், புதிய தேர்வு குழு தலைவர் மொயின் கானும் 2 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார்கள் என்று நஜம் சேத்தி கூறியுள்ளார்.

SHARE