பாக்தாத்தில் அடுத்தடுத்து கார் குண்டு தாக்குதல்: 42 பேர் பலி

391
பாக்தாத்தில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் வசிக்கும் இடங்களில் நடைபெற்ற கார் குண்டு தாக்குதலில் 42 பேர் பலியானதாக அந்நாட்டு மருத்துவ மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டு வெவ்வேறு தாக்குதல்களால் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது.

முதல் தாக்குதல் புதன்கிழமை மாலை சத்ர் நகரின் கடை வீதியில் இரண்டு கார் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. அதில் 31 பேர் பலியானதுடன் 34 பேர் காயமடைந்தனர். பின்னர் இரவு நேரத்தில் உர் அருகே நடைபெற்ற மற்றொரு கார் குண்டு தாக்குதலில் 11 பேர் பலியானார்கள். அந்நாட்டில் சன்னி போராளிகள் எனப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் மொசூல் உள்ளிட்ட பல்வேறு இடங்களை கைப்பற்றியதால் தலைநகர் பாக்தாத்தில் அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE