பாக். சிறையில் இருந்து 151 இந்திய மீனவர்கள் இன்று விடுதலை

457
இந்திய பிரதமராக நரேந்திரமோடி நாளை (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார். இந்த விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் கலந்து கொள்கிறார். இந்த நிலையில் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 151 பேர் நல்லெண்ண அடிப்படையில் இன்று விடுதலை செய்யப்படுகிறார்கள்.இந்த தகவலை பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் வெளியிட்டனர். இந்திய மீனவர்களுக்கான உடைகள், பணம் ஆகியவற்றை வழங்கி, வாகா எல்லைக்கு கொண்டு வரப்படுகிறார்கள். அங்கிருந்து அவர்களை பஸ் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த 229 மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் வாடுகிறார்கள். 780 படகுகளையும் பாகிஸ்தான் கடற்படை பிடித்து வைத்துள்ளது. அதே போல பாகிஸ்தானை சேர்ந்த 200 மீனவர்களும் 150 படகுகளும் இந்திய கடற்படையால் பிடித்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE