பாதுகாப்பை ஐ.நா உறுதி செய்தால் நாடு திரும்புவோம்: இலங்கை அகதிகள் கோரிக்கை:-

390

 

பாதுகாப்பை ஐ.நா உறுதி செய்தால் நாடு திரும்புவோம்: இலங்கை அகதிகள் கோரிக்கை:-

தங்களுடைய  பாதுகாப்பை ஐக்கிய நாடுகள் உறுதி செய்தால் தாங்கள் தயாகம் திரும்ப தயாராக இருப்பதாகவும் போர் காலத்தில் காணாமல் போன ஒரு லட்சம் பேரை இலங்கை அரசு திரும்ப கொண்டுவர வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர் என்று கடலோர பாதுகாப்பு குழும தலைவர் சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.

அறந்தாங்கியை அடுத்த அழியாநிலை இலங்கை அகதிகள் முகாமில் அகதிகளின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கடலோர பாதுகாப்பு குழும தலைவர் சொக்கலிங்கம் தலைமைதாங்கி, அகதிகளின் குறைகளை கேட்டறிந்து, சிறப்புரையாற்றினார். அதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழகத்தில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு கடல்வழியாக 5,640 கடல் மைல் தூரம் கொண்டது. இந்த தூரத்தை கப்பல் மூலம் சென்றாலே 10 நாட்கள் எடுக்கும். ஆனால், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளிடம் சில சமூக விரோதிகள்,  படகுகளில் அழைத்துச் செல்வதாகக் ஆசை வார்த்தை கூறி கூறி பணம் பெறுகின்றனர்.

ஆனால், அவ்வாறு படகுகளில் அவுஸ்திரேலியா செல்வதற்கு சாத்தியம் இல்லாததால், அவர்கள் பணத்துடன் தப்பிச் செல்கின்றனர். ஆனால் அகதிகள் நடுக்கடலில் தத்தளிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே அகதிகள் யாரும் சமூக விரோதிகளின் வார்த்தைகளை நம்பி அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் முடிவை எடுக்க வேண்டாம்.  மேலும் முகாமிற்கு புதிதாக வருபவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

உரிய பதிவு இல்லாமல் அகதிகள் முகாமில் வசிப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே, பதிவு இல்லாதவர்கள் உடனடியாக உரிய ஆவணங்களை வழங்கி பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் யாராவது முகாமில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது குறித்து தகவல் தெரிந்தால் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். இலங்கை அகதிகளுக்கு தமிழக அரசம், மத்திய அரசும் பல்வேறு உதவிகளை செய்துவருகிறது. எனவே அகதிகள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அகதிகள் கருத்து
திருவரங்குளம் தோப்புக்கொல்லை முகாமில் அகதிகளிடம் கருத்து கேட்ட போது.

இலங்கைக்கு நாங்கள் திரும்பிச் செல்ல வெண்டுமானால் வட மாகாணத்தில் உள்ள இராணுவத்தை இலங்கை அரசு திரும்ப பெற வேண்டும்.

எங்களின் பாதுகாப்பை ஐ.நா உறுதி செய்ய வேண்டும். போர் காலத்தில் காணாமல் போன ஒரு லட்சம் மக்களை இலங்கை அரசு திரும்ப கொண்டுவர வேண்டும்.

விடுதலைப்புலிகள் என்ற பெயரில் பிடித்தச் செல்லப்பட்ட இளைஞர்களை மீண்டும் விடுதலை செய்ய வேண்டும் இலற்றை இலங்கை அரசு செய்ய முன்வந்தால் நாங்கள் தாயகம் திரும்ப தயாராக இருக்கிறோம் என்று கோரிக்கை வைத்தனர் என்றார்.

SHARE