பான்கீமூனை அன்று புலிகளின் ஆதரவாளர் என்று கூறிய மகிந்த அரசு இன்று இலங்கைவருமாறு அழைக்கிறது

483
இலங்கையின் தற்போதைய நிலைமைகளைப் பார்வையிடுவதற்காக மீண்டும் ஒருஐமுறை இலங்கை வருமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ முனுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஒரு முறை அழைப்பு விடுத்துள்ளார்.
207563453867-LL
சீனாவின் சங்காய் நகரில் நடைபெறும் ஆசிய நாடுகளிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றுள்ள நிலையிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இந்தச் சந்திப்பை மேற்கொண்டார்.போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் இலங்கையில் இடம்பெற்றுள்ள அபிவிருத்திகள் குறித்து இந்தச் சந்திப்பின் போது ஜனாதிபதி விளக்கினார். இலங்கைக்கு மற்றொரு விஜயத்தை மேற்கொண்டு இந்த அபிவிருத்திகளைப் பார்வையிடுமாறும் ஜனாதிபதி இதன் போது கோரிக்கை விடுத்தார்.நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதில் காணப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு விளக்கிய ஜனாதிபதி, இந்தப் பரிந்துரைகளில் 30 வீதமானவை ஏற்கனவே நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

போர்க் காலத்தில் இடம்பெற்ற அத்துமீறல்கள் குறித்து உள்ளூர் விசாரணைகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் உறுதியாகவிருப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, சர்வதேச விசாரணையை ஏற்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

SHARE