பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை.சேனா­தி­ரா­சாவே தமி­ழ­ரசுக் கட்சியின் தலைமைப் பத­விக்குப் பொருத்­த­மா­னவர்- சீ.வி.விக்­கி­னேஸ்­வரன்

394
download

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை.சேனா­தி­ரா­சாவே தமி­ழ­ரசுக் கட்சியின் தலைமைப் பத­விக்குப் பொருத்­த­மா­னவர். தலைவர் இரா.சம்­பந்­த­னுக்கு அடுத்­த­ப­டி­யாக அவரே தமி­ழ­ரசுக் கட்­சியை நீண்­ட­கா­ல­மாக கட்­டி­வ­ளர்த்த பெரு­மைக்­கு­ரி­யவர் என வட­மா­காண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைமைப் பத­விக்கு வட­மா­காண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­கி­னேஸ்­வரன் வர­வுள்­ள­தாக வெளியா­கிய செய்தி தொடர்­பாக கருத்துத் தெரி­விக்­கும்­ போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இவ் விடயம் தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில்,

வட­மா­காண ஆளுநர் மீள் நிய­மனம் கார­ண­மாக முத­ல­மைச்சர் பத­வி­ வி­லகத் திட்­ட­மிட்­டுள்ளார் எனவும் முத­ல­மைச்சர் பத­வி­யி­லி­ருந்து விலகி பெரிய பத­வியை குறி­வைக்­கின்றார் எனவும் சிலர் கூறி­வந்­துள்­ளனர்.

இவ் விட­யங்கள் அனைத்தும் பொய் எனத் தெரிந்துகொண்ட பின்னர் அதே கதையைக் கூறி­ய­வர்கள், நான் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைமைப் பத­விக்கு வர­வுள்­ள­தாக கூறு­கின்­றனர்.

அப்­ப­த­வியை நான் பொறுப்­பேற்பேன் என எவ­ருமே நினைக்கக் கூடாது. உண்­மையில் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைமைப் பத­விக்கு மாவை.சேனா­தி­ரா­சாவே வர­வேண்­டி­வரும், வரக்­கூ­டி­ய­வ­ரா­கவும் உள்ளார்.

இதனை நான் உறு­தி­யாக கூறு­கின்றேன். நான் அறிந்­த­வ­ரையில் கட்­சியில் தலை­மை­களும் அவ்­வாறே கரு­து­கின்­றனர்.

இவ்­வா­றான கதை­களைப் பரப்புவதன் மூலம் சிலர் கட்சியைச் சிதைக்க எடுக்கும் முயற்சியை முறியடித்து மாவை.சேனாதிராசாவிற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன் என்றார்.

SHARE