பார்ட்டியில் பங்கேற்காமல் படம் வரையும் ஹன்சிகா 

423நடிகை ஹன்சிகா ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டுகிறார். ஹீரோயின்களில் வித்தியாசமானவர் ஹன்சிகா. நைட் பார்ட்டி, ஷாப்பிங் என்று சுற்றாமல் ஓய்வு நேரங்களில் வீட்டில் அமர்ந்து ஓவியம் வரைகிறார். அத்துடன் வருடாவருடம் தனது பிறந்த நாளின்போது ஆதரவற்ற குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். கடவுள் படங்கள், காட்டு விலங்குகள் என பல்வேறு விதமான ஓவியங்கள் வரைந்து வீட்டில் அடுக்கி வைத்திருக்கிறார். இதுபற்றி ஹன்சிகா கூறும்போது, நான் பார்ட்டியில் பங்கேற்பதில்லை. பிஸியான ஷூட்டிங்கிலிருந்து எனது நேரத்தை வேறுவழியில் செலவிட ஓவியம் வரைகிறேன். பள்ளியில் தொடங்கிய இந்த ஆர்வத்தை படிப்படியாக வளர்த்துக்கொண்டேன். மூட் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து ஓவியங்கள் தீட்டுவேன்.

 

இது எனக்கு மாற்று தொழிலா? என்கிறார்கள். அப்படி இல்லை. இதுவொரு ஹாபி அவ்வளவுதான். நான் கடவுள் பக்தி உள்ளவள். கடவுள் ஓவியங்கள் வரைந்திருக்கிறேன். விநாயகர், ராதா கிருஷ்ணா படங்கள் நான் வரைந்ததில் எனக்கு மிகவும் பிடித்த ஓவியங்கள் ஆகும். முதியவர்களுக்காக ஒரு  விடுதி கட்ட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அது நிறைவேறும் என்று நம்புகிறேன். இவ்வாறு ஹன்சிகா கூறினார்

 

SHARE