பாலா இயக்கத்தில் நடிக்கும் ‘சூப்பர் சிங்கர்’ பிரகதி!

466

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டையே கலக்கியவர் பிரகதி. இதை தொடர்ந்து இவர் பரதேசி, வணக்கம் சென்னை போன்ற படங்களில் பாடினார்.

மணிரத்னம், கௌதம் மேனன் போன்ற இயக்குனர்கள் சொல்லியும் நடிக்க மறுத்த இவர், இயக்குனர் பாலா தன் படத்தில் நடிக்க அழைத்தாராம்.

முதலில் யோசித்த இவர் பின்பு பாலாவின் மீது கொண்ட நம்பிக்கையால் நடிக்க சம்மதித்துவிட்டாராம். தாரை தப்பட்டை படத்தில் நாதஸ்வர கலைஞராக வரும் சசிகுமாரின் தங்கை ஒரு நாட்டுப்புற பாடகி. அந்த கேரக்டருக்கு பாலா பிரகதியை தேர்வு செய்துள்ளார். தற்போது பிரகதி நடிப்பு பயிற்சியும், நடிக்க போகும் கேரக்டருக்கான ஒத்திகையும் செய்து வருகிறாராம்

SHARE