பால் விற்பனை நிலைய கொலையாளி கைது

38

 

கலேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலிகமுவ பிரதேசத்தில் அமைந்துள்ள தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பண்ணையின் விற்பனை நிலையத்தில் காவலாளியை கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி, குறித்த சந்தேகநபர் கொழும்பில் தலைமறைவாகியிருந்த நிலையில், நேற்று (06) மாலை, தொட்டலங்க சேதவத்தை பாலத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்புள்ளை, கப்புவத்தை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி இரவு பால் விற்பனை நிலையத்திற்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த சில பொருட்களைத் திருடிச் சென்று இரவுப் பணியில் இருந்த காவலாளியை கை, கால் வாயைக் கட்டிக் கொலை செய்துள்ளனர்.

இவ்வாறு கொல்லப்பட்டவர் 52 வயதான கே.சுவாமிநாதன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

சம்பவம் தொடர்பில் மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE