பாஸ்போட்டில் கிறுக்கித்தள்ளிய சிறுவனால் நாடு திரும்பமுடியாமல் அவதியில் தந்தை

515

சீனாவை சேர்ந்த நபர் ஒருவரது மகன் அவரின் கடவுச்சீட்டில் படங்கள் வரைந்ததால் நாடு திரும்ப முடியாமல் அந்நபர் தவித்து வருகிறார்.

சீன நாட்டை சேர்ந்த தந்தையும், அவரது நான்கு வயது மகனும் தென்கொரியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தனர்.

விமானத்தில் பிரயாண களைப்பு தெரியாமல் இருக்க சிறுவன் தனது தந்தையின் கடவுச்சீட்டில் எழுதுகோலினால் அவரது உருவமே தெரியாத அளவிற்கு சரமாரியாக கிறுக்கி படம் வரைந்துள்ளான்.

இதன்பின் தென்கொரிய விமான நிலையத்தையடைந்த அவ்விருவரையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

அப்போது கடவுச்சீட்டு கிறுக்கப்பட்டுள்ளதை அறிந்த பாதுகாப்பு அதிகாரிகள், இவரது கடவுச்சீட்டு பிரச்சனையாக உள்ளது என கூறி தந்தையையும் மகனையும் நாடு திரும்ப அனுமதிக்கவில்லை.

மேலும் இந்த சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டாளர்கள் கடவுச்சீட்டில் இருப்பது அவர்தான் என்று கூறியபோதிலும், அதனை தென்கொரிய பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்க மறுத்துள்ளனர்.

SHARE