பிக்குகளை கட்டுப்படுத்தத் தவறினால் இஸ்லாமிய தீவிரவாதம் உருவாகும்! -அமைச்சர் ரவூப் ஹக்கீம்

391

 

“இலங்கை அரசாங்கம் பௌத்த பிக்குகளை கட்டுப்படுத்தத் தவறினால், இஸ்லாமிய தீவிரவாதம் உருவாகுவது தவிர்க்க முடியாததாகிவிடும்” – இவ்வாறு எச்சரித்துள்ளார் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம். வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் கடந்த மாதம் இடம்பெற்ற மத வன்முறைகளை தடுத்து நிறுத்தத் தவறியதைத் தொடர்ந்து தன்னைப் பதவி விலகுமாறு தனது ஆதரவாளர்கள் கடும் அழுத்தம் கொடுத்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்தர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் இஸ்லாமியர்கள் குறித்த அச்சம் அதிகரித்து வருவதாகவும், மேற்குலகில் காணப்பட்ட இந்த மனோ நிலையைத் தற்போது தங்கள் தங்கள் அரசியலுக்கு ஏற்ற மாதிரி பயன்படுத்தும் போக்குக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பௌத்த மதத்தினர் உதைத்து விளையாடுவதற்கான பொருளாக -‘உதை’ பொதியாக – முஸ்லிம்கள் மாறியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தாவிட்டால் இது முஸ்லிம் சமூகம் தீவிரவாத மயப்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கும்.

இது வெளிநாட்டு தீவிரவாத சக்திகளின் விளைநிலமாக இலங்கையை மாற்றும். இது குறித்தே நாங்கள் கவலையடைந்துளளோம்.- என அவர் தெரிவித்துள்ளார். எதனை நீங்கள் (வன்முறைககள் மூலம்) ஒழிக்க நினைக்கிறீர்களோ அது உங்களை வந்தடையும் எனவும் அவர் எச்சரித்தார். – See more at:

SHARE