பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அடாவடித்தனம்-இந்துமத புனித பூமியில் பள்ளிவாசல்

451

மட்டக்களப்பில் பண்டைய இந்து மதச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் நில அபகரிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாக, முஸ்லிம் பள்ளிவாசல் அமைக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில்குளம் கிராமத்தில் கடந்த வருடம் நிலத்தைத் தோண்டுகின்றபோது பண்டைய காலத்து இந்து மதச் சின்னங்களுடன் சில பௌத்த மதச் சின்னங்களும் கண்டெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பை ஆட்சி செய்த சிற்றரசியான உலக நாச்சியினால் மண்முனைப் பிரதேசத்தில் பல இந்துக் கோவில்கள் அமைக்கப்பட்டு பரிபாலிக்கப்பட்டன.

அந்த வகையில் கோவில்குளம் என்ற கிராமத்திலும் பல இந்து ஆலயங்கள் அமைக்கப்பட்டன. பின்பு ஏற்பட்ட அன்னியரின் படையெடுப்பினால் இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டபோது கோவில்குளத்தில் இருந்த ஆலயங்களும் அழிக்கப்பட்டன.

ஆனால் குறித்த மதச் சின்னங்கள் அரசியினால் மறைத்து வைக்கப்பட்டடிருக்கலாம் என ஆய்வாளர்களினால் நம்பப்படுகின்றது.

மண்முனைப்பற்றுப் பிரதேசத்தில் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நீண்டகாலமாக தமிழ் மக்களின் காணிகளை பலவந்தமான அபகரித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

பிரதி அமைச்சரின் இந்த சமூக விரோத செயற்பாடானது, தமிழ் முஸ்லிம் மக்களிடையே இனமுறுகலை தீவிரமடையச் செய்யும் நிலைக்குத் தள்ளியுள்ளதாக ஆரையம்பதி வாழ் நலன்விரும்பிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

எனவே குறித்த பிரதேசத்தினை தொல்பொருள் ஆய்வுப் பகுதியாகப் பிரகடனப்படுத்தி, பள்ளிவாசல் அமைக்கப்படுவதனை உடனடியாக தடுத்து இந்துக்களின் புனித பூமியினைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி வாழ் இந்துக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

– See more at: http://www.newstamilwin.com/show-RUmsyJTdKUhs7.html#sthash.HTOjd85W.dpuf

SHARE