‘பிரபு’ என்று கையில் டாட்டூ குத்தியிருந்த நயன்தாரா.. அதை எப்படி மாற்றியுள்ளார் தெரியுமா

12

 

கடந்த 15 வருடத்திற்கும் மேலாக மார்க்கெட் இழக்காத முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. இவர் கடந்த ஜூன் 9ஆம் தேதி தன்னுடைய நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின் இருவரும் வெளிநாட்டிற்கு சென்றிருந்தார்கள். அங்கிருந்து நயன்தாரா – விக்னேஷ் சிவன் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு ரொமான்டிக் புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலானது.

‘பிரபு’ டாட்டூ
நடிகை நயன்தாரா பிரபல நடிகர் பிரபு தேவாவை காதலித்தார் என்பதும் அந்த காதல், திருமணம் வரை சென்று தோல்வியடைந்தது என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

பிரபு தேவாவை காதலித்தபோது, அவருடைய பெயரான ‘பிரபு’ என்ற வார்த்தையை தனது கையில் பச்சை குத்தியிருந்தார் நயன்தாரா. ஆனால், காதல் தோல்விக்கு பின் ‘பிரபு’ என்ற வார்த்தையை ‘Positivity’ என்று மாற்றி பச்சை குத்தியுள்ளார்.

SHARE