பிரான்ஸிலுள்ள பள்ளிவாசல்களை மூடுவதற்கு அதிரடி நடவடிக்கை.

291

 

paresபிரான்ஸிலுள்ள சுமார் 160 பள்ளிவாசல்களை மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் 13 ஆம் திகதி பாரிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரான்ஸிலுள்ள பள்ளிவாசல்களுக்கான இமாம்களை நியமிக்கும் பொறுப்பு வகிக்கும் ஹஸன் அல் அலோவுய் இந்தத் தகவலை தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரான்ஸ் உள் விவகார அமைச்சுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும் உத்தியோகபூர்வத் தகவல்களின் அடிப்படையில் 100 தொடக்கம் 160 வரையிலான பள்ளிவாசல்களை மூடுவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில்இ கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலையடுத்து ஏற்கனவே 3 பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE