பிரான்ஸில் நடைபெறும் 70ஆவது படைவீரர்கள் நினைவு தினத்தில் ரஷிய அதிபரை சந்திக்கும் திட்டம் இல்லை- ஒபாமா

617

பிரான்ஸில் நடைபெறும் 70ஆவது படைவீரர்கள் நினைவு தினத்தில் ரஷிய அதிபரை  சந்திக்கும் திட்டம் இல்லை என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஸ் எர்னஸ்ட் கூறியதாவது:

பிரான்ஸில் அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெறும் 70ஆவது படைவீரர்கள் நினைவு தினத்தில் கலந்துகொள்ளும் அதிபர் ஒபாமா, உலகத் தலைவர்கள் யாரையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்க முடியாது.

இரண்டாம் உலகப்போரில் வெற்றியைத் தேடித்தந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்த, உலகத் தலைவர்கள் மற்றும் அதிபர்களுக்கு கிடைத்த இது ஒரு முக்கியமான வாய்ப்பாகும். இந்தப் பயணத்தை ஒபாமா ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார். இதில் ரஷிய அதிபர் புதினை சந்திக்க வேண்டியது முக்கிய மில்லை என்று அதிபர் ஒபாமா கூறியதாக ஜோஸ் எர்னஸ்ட் தெரிவித்தார்.

SHARE