பிரிட்டன் வெளியுறவுத்துறை மந்திரி வில்லியம் ஹேக் திங்களன்று இந்தியா வருகை

455
பிரிட்டன் வெளியுறவுத்துறை மந்திரியான வில்லியம் ஹேக் இரு நாள் அரசு முறைப் பயணமாக வரும் திங்களன்று இந்தியா வருகிறார். அப்போது வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகின்றது.

அவருடன் அந்நாட்டின் கருவூலத்தலைவரானஜார்ஜ் ஆஸ்போர்ன் மற்றும் அந்நாட்டை சேர்ந்த மூத்த மந்திரிகள் குழுவும் வருகின்றது. தங்கள் நாட்டுக் குழுவுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜை சந்திக்கும் அவர் இரு தரப்பு பிராந்திய உறவு குறித்தும், பல்வேறு உலக பிரச்சனைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.கருவூலத்தலைவரான ஆஸ்போர்ன் பாதுகாப்பு துறை மந்திரியான அருண் ஜெட்லியை சந்தித்து நிதி மற்றும் பொருளாதாரம் சம்பந்தமாக பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் அவர்கள் இருவரும் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக பாதுகாப்பு துறைக்கான அந்நிய மூதலீட்டிற்கான வாய்ப்பை தங்கள் நாட்டிற்கு அளிக்கவேண்டும் என்று அவர்கள் மோடியிடம் வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE