பிரித்தானிய பிரதமர் புலி ஆதரவாளர் – கெஹெலிய ரம்புக்வெல்ல

488

பயங்கரவாதத்தை தோற்கடித்த காரணத்தினால் சில நாடுகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்ப்பை காட்டி வருவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், விடுதலைப் புலிகளுக்காக குரல் கொடுப்பதற்காகவே பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு வந்தார் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கண்டியில் உள்ள மத்திய மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளை போரில் தோற்கடித்தாலும் இன்னும் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு இலங்கையில் உள்ளது போல் வெளிநாடுகளிலும் உள்ளது.

எவ்வாறாயினும் இலங்கையில் மீண்டும் பயங்கரவாதத்திற்கு இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE