பிரித்தானிய மஹாராணி மும்மொழிகளிலும் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைத்துள்ளார்.

396

பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத் மூன்று மொழிகளிலும் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைத்துள்ளார். இலங்கையின் அறுபத்து ஏழாம் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த விசேட வாழ்த்துச் செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வருடங்களில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியசரசின் மக்களின் மகிழ்ச்சி மற்றும் சுபிட்சத்துக்கான எனது சிறந்த வாழத்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்களது தேசிய தினக் கொண்டாட்டங்களின் போது எனது மனமார்ந்த வாழ்த்துக்ளை அனுப்பி வைப்பது எனக்கு பெரு மகிழ்ச்சி அளிப்பதாக மஹாராணி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE