புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் 30 பேர் இராணுவப் பயிற்சிகளை முடித்து வெளியேறினர்.

427

இலங்கை இராணுவத்திற்கு அண்மையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் 30 பேர் இன்று புதன்கிழமை தங்களது பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறினர்.

இந் நிகழ்வு முல்லைத் தீவு இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

பயிற்சிகளை முடித்து வெளியேறிய இந்த யுவதிகள், இராணுவ பெண்கள் படைப்பிரிவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் குறித்த 30 தமிழ் யுவதிகளும் இராணுவத்தில் சேர்த்துகொள்ளப்பட்டதுடன் மூன்று மாத பயிற்சிகளின் பின்னர் இன்று இவர்கள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் வழங்கிய ஆலோசனைகளின் பேரில், தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE