புத்தாண்டு சேமிப்புவாரத்தினை முன்னிட்டு ஓமந்தை சமுர்த்தி வங்கிச்சங்கத்தின் நிகழ்வுகள்

522
வவுனியா ஓமந்தை  சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் 2014 சித்திரை புத்தாண்டு  சேமிப்பு வார்தினை முன்னிட்டு அங்கத்தவர்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியும் பரிசுகுலுக்கலும்  (28.04.2014) அன்று  ஓமந்தை  சமுர்த்தி வங்கிச் சங்கத்தில் இடம்பெற்றது.
வவுனியா  பிரதேச செயலாளர் திரு.கா. உதயராசா  அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமுர்த்தி பயனாளிகளுக்கான பாரம்பரிய விளையாட்டுக்கள் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள் சேமிப்பில் ஈடுபட்டவர்களுக்கான பரிசுக்குலுக்கல்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு செய்த வேலையை பாராட்டி நினைவு சின்னமும் வழங்கப்பட்டது.
நடைபெற்ற நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக பிரதேச செயலாளர் திரு.கா.உதயராசா, சமுர்த்தி உதவி ஆணையாளர் பி எம் கே வீரசிங்க, சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் திருமதி எஸ்.சந்திரகுமார், சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் எஸ்.பாலசேகர், ஓமந்தை மத்திய கல்லுரி அதிபர் திருஞானசம்பந்தமூர்த்தி, வங்கி கட்டுபாட்டு சபைத்தலைவர் திரு இஸ்ரவேல், முர்த்தி தலைமைபீட கணக்காய்வாளர் திரு அனுரா,  மற்றும் கிராமசேவகர் ஜெயபாலன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்
SHARE