புலனாய்வுப் பிரிவுகள் இலங்கையில் எந்நேரமும் செயற்படும் – கோத்தபாய:-

506

 images (6)

இலங்கையில் தீவிரவாதத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க எந்தவொரு தனிநபருக்கோ அல்லது அமைப்புக்கோ இடமளிக்கப்படமாட்டாது என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடந்த உயர்மட்டக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். நாட்டில் தீவிரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், படையினர், தீவிரமான விழிப்பு நிலையில் வைக்கப்பட்டிருப்பர் என்றும் அவர் கூறினார்.

படையினர் தற்போது, அபிவிருத்தி மற்றும் மீள்கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். ஆனால், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவர்களின் முக்கியமான பொறுப்பு என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தீவிரவாதிகள் மீள ஒருங்கிணைவதை தடுப்பதற்கு புலனாய்வுப் பிரிவுகள் எந்நேரமும் செயற்பாட்டு நிலையில் உள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE