புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது! அரசாங்கம்

442

இனப்பிரச்சினை தீர்வுக்காக தமக்கு ஐந்து யோசனைகள் கிடைத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது

தனிப்பட்டவர்கள் மற்றும் குழுக்களிடம் இருந்து இந்த யோசனைகள் கிடைத்துள்ளதாக கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இனப்பிரச்சினை தீர்வுக்கான யோசனைகளை தாம் வரவேற்பதாக அறிவித்திருந்தார்.

இதன்மூலம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு புதிய முனைப்புக்களை மேற்கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வரை ஐந்து யோசனைகள் கிடைத்துள்ளன.

இந்த யோசனைகளுக்காக ஒரு மாதக் காலப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் புலம்பெயர் புலி ஆதரவு அமைப்புக்களின் யோசனைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

அதிகாரப் பகிர்வு தொடர்பிலான யோசனைகளை முன்வைக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மின்னஞ்சல் ஊடாக புலம்பெயர் புலி ஆதரவு தமிழ்த் தலைவர்களுக்கு தகவல் அனுப்பி வைத்துள்ளது.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்னிலையில் யோசனைத் திட்டமொன்றை முன்வைக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கு முன்னரும் தமிழ்த தேசியக் கூட்டமைப்பு 43 அம்சங்களைக் கொண்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விமான நிலையம்,  துறைமுகம்,  வெளிநாட்டு நிறுவனங்களுடன் உடன்படிக்கைகளை கைச்சாத்திடல்,  வெளிநாட்டு நிதிகளைப் பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட விடயங்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியிருந்தது.

geneva

SHARE