புலிக்கொடியை எடுத்துச் செல்ல தடை விதித்த கனேடிய பாடசாலை

509

விடுதலைப் புலிகளின் கொடியை பாடசாலைக்கு கொண்டு செல்ல கனேடிய பாடசாலை ஒன்று தடை விதித்துள்ளது.

டொரேன்டோவில் உள்ள குறித்த பாடசாலையில் நடைபெறும் வருடாந்த கலாசார கண்காட்சியில் கடந்த மூன்று வருடங்களாக தமிழ் மாணவர்கள் விடுதலைப் புலிகளின் கொடியுடன் கண்காட்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், இம்முறை கண்காட்சியில் புலிகளின் கொடியை எடுத்து வர தடை விதிப்பது என பாடசாலை அதிபர் தீர்மானித்துள்ளார்.

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட கொடிகளை மாத்திரம் கண்காட்சிக்கு எடுத்து வர முடியும் என பாடசாலை அதிபரான ஜிம் ரொபர்ட்சன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் டொரன்டோ பத்திரிகை ஒன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள மார்கண்டு என்ற மாணவர், புலிகளின் கொடியை கொண்டு வர அனுமதிக்காவிட்டால், எப்படி தமது கலாசாரத்தை பகிர்ந்து கொள்ள முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

கனேடிய அரசாங்கம் 2006 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE