பெட் ரூம் சீனுக்கு முன் ஹீரோவுடன் பூஜா ரகசிய பேச்சு 

472
பெட் ரூம் சீனுக்கு முன் நெருங்கி நடிப்பது பற்றி நடிகருடன் ரகசியமாக பேசினார் பூஜா காந்தி.தமிழில் ‘கொக்கி, ‘திருவண்ணாமலை, ‘தலையெழுத்து படங்களில் நடித்தவர் பூஜா காந்தி. தற்போது கன்னட படங்களில் நடித்து வருகிறார். நடிகையின் வாழ்க்கை கதையொன்றில் பல ஆண்களுடன் தொடர்புகொண்டவராக பெயரிடப்படாத கன்னட படத்தில் நடித்து வருகிறார். பெட் ரூம் காட்சியில் நடிகர் ரவிசங்கரும், பூஜாவும் தத்ரூபமாக நடிக்க வேண்டும் என்று இயக்குனர் சதிஷ் பிரதான் இருவரிடம் கேட்டுக்கொண்டார். ‘கொஞ்சம் இருங்க இதோ வந்துவிடுகிறேன் என்று ரவி சங்கரை காரில் அழைத்துக்கொண்டு தனியாக சென்றார் பூஜா. அரை மணி நேரம் கழித்து அவர்கள் திரும்பி வந்தனர். பிறகு பெட் ரூம் சீனுக்கு இருவரும் தயாராக வந்தனர். கேமராமேன். இயக்குனர் ஒன்றிரண்டு லைட் மேன் தவிர மற்றவர்கள் வெளியேற்றப்பட்டனர். பிறகு இருவரும் நடித்த கிக்கான காட்சி படமாக்கப்பட்டது. இதுபற்றி யூனிட்டார் கூறுகையில், பெட்ரூம் காட்சியில் நெருக்கமாக நடிக்கும்போது கூச்சம் இருக்கக்கூடாது என்று டைரக்டர் கூறினார். இதனால் அந்த காட்சியில் எப்படி நடிப்பது என்பது குறித்து பேசவே அவர்கள் காரில் தனியாக சென்றனர் என கூறினர்

SHARE