பெண்களின் பிறப்பு உறுப்புகளில் துப்பாக்கியால் சுட்டும், சில பெண்களை கொடூரமாகக் கற்பழித்தும் கொலைசெய்துள்ளது இலங்கை இராணுவம்

854

போரில் காயமடைந்து, மயக்கமுற்ற நிலையிலும் மற்றும் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் நிலையில் இராணுவத்திடம் சிக்கிய சில பெண் போராளிகளை இலங்கை இராணுவம் கொடுமைப்படுத்தி அவர்களின் தலைகளை வெட்டி துண்டித்துள்ளது. சர்வதேச போர் மரபுகளுக்கு அப்பால், ஒரு மனிதநேயம் இல்லாமல் தம்மிடம் சிக்கிய பெண் போராளிகளைக் கொடுமைப் படுத்திக்கொண்றுள்ளது இலங்கை இராணுவம். சில பெண்களின் மார்பகங்களை வெட்டி துண்டாடியுள்ளது . போர் முனையில் காயமடைந்து துரதிஷ்டவசமாக இராணுவத்திடம் மாட்டிக்கொண்ட பெண்போராளிகளை, மரியாதையோடு நடத்தவேண்டாம் நன்றிபடுத்தாமல் இருந்தாலே போதும். ஆனால் இலங்கை இராணுவமோ அதனைக் கூட விட்டுவைக்கவில்லை.
LTTE Girls
பெண்கள் என்று கூடப் பாராமல் பெண்களின் பிறப்பு உறுப்புகளில் துப்பாக்கியால் சுட்டும், சில பெண்களை கொடூரமாகக் கற்பழித்தும் கொலைசெய்துள்ளது இலங்கை இராணுவம். இறந்த பெண் போராளிகளின் சீருடைகளைக் களைந்து, அவர்களை மானபங்கப்படுத்தி அவமதித்து, பின்னர் அதனை மோபைல் போன்களில் வீடியோவாக எடுத்து தனது நண்பர்களுக்கு காட்டி மகிழ்கிறது இலங்கை இராணுவம். கொழும்பிலும் அதன் புற நகர்ப்பகுதிகளில் உள்ள மதுபாண களியாட்ட இடங்களில், மது அருந்தும் இராணுவத்தினர், அங்கே வரும் தமது நண்பர்களுக்குபொழுதுபோக்காக இப் புகைப்படங்களை காட்டி சிரித்து மகிழ்கின்றனர்.
zz13
தமிழ் பெண்களை நிர்வாணமாகப் பார்க்க அவர்களது நண்பர்களும் குடிக்கச் செல்கின்றனர்.
இப்படியான ஒரு இனத்துடன் தான் எம்மை சேர்ந்து வாழச் சொல்கிறது உலக நாடுகள். இப்படியான ஒரு இனத்துடன் தான் ஒத்துப் போகச் சொல்கிறது உலக நாடுகள் ! இது சாத்தியமா, ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழுவோ, இலங்கை சென்று வந்தேன் அங்கே இப்போது ஒன்றுமே இல்லை, எல்லாம் வழமைக்கு திரும்பிவிட்டது என்று கூறும் தமிழர்களுக்கு உண்மையாகவே அங்கே என்ன நடக்கிறது என்று தெரிகிறதா ? கேளிக்கை விடுதிகளிலும், களியாட்ட இடங்களிலும் எம் தமிழ் பெண்களின் மானத்தை கப்பல் ஏற்றுகிறது சிங்கள இராணுவம். இன அழிப்பு நாளான மே 18ம் திகதி தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு எமது ஒற்றுமையை உலகிற்கு காட்டவேண்டும். போர் குற்றம் இடம் பெற்ற நாளை நாம் அனைவரும் நினைவு கூர்ந்து அதனை உலகிற்கு பறைசாற்ற வேண்டும் !
1 (6)
இது தொடர்பாக மேலதிகப் புகைப்படங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதனை நாம் ஆவனப்படுத்தி ஐ.நா மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபைக்கு அனுப்பிவைக்கவும் உள்ளோம்.
SHARE