பெண்களின் மார்புகள் ஆபத்தான பொருட்கள் அல்ல, பெண்கள் மேலாடை இன்றி நடமாட முன்பு சட்டத்தால் அனுமதிக்கப்பட்டு இருந்தனர் என்று ஊடகங்களுக்கு ஆர்ப்பட்டக்கார பெண்கள் கூறினார்கள்

695
மேலாடை இல்லாமல் பெண்கள் சூரிய குளியல் செய்ய கூடாது என்கிற சட்டம் பிறேசில் நாட்டில் தற்போது கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.ஆயினும் இச்சட்டத்தை வாபஸ் பெற கோரி அரசுக்கு எதிராக பெண்கள் மேலாடை இல்லாமல் ஆர்ப்பாட்டம் ஒன்றை கடற்கரை ஒன்றில் முடுக்கி விட்டனர்.

இதில் பல்லாயிரக் கணக்கில் பெண்கள் பங்கேற்பார்கள் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. ஆயினும் சிறிய தொகையினரே பங்கேற்றனர். இருப்பினும் இவர்களை படங்கள் எடுக்க நூற்றுக் கணக்கான புகைப்படப் பிடிப்பாளர்கள் வந்திருந்தனர்.

பெண்கள் கடற்கரையில் வைத்து மேலாடைகளை கழற்றி, அரை நிர்வாணமாக தோன்றினார்கள்.

இதில் மிக ஊக்கமாக ஈடுபட்டவர்களில் 73 வயது பாட்டியும் ஒருவர்.

மேலாடைகள் இல்லாமல் பெண்கள் தோன்றுகின்றமை அநாகரிகமான செயல் என்கிறது பிறேசில் அரசு.

நிர்வாணத்துக்கு எதிரான சட்டம் 1940 ஆம் ஆண்டுக்கு முன் பிறேசிலில் கொண்டு வரப்பட்டது. நிர்வாணமாக தோன்றுகின்றமை இங்கு ஒரு வருட சிறைத் தண்டனைக்கு அல்லது அபராதத்துக்கு உரிய குற்றம்.

ஆனால் பெண்களின் மார்புகள் ஆபத்தான பொருட்கள் அல்ல, பெண்கள் மேலாடை இன்றி நடமாட முன்பு சட்டத்தால் அனுமதிக்கப்பட்டு இருந்தனர் என்று ஊடகங்களுக்கு ஆர்ப்பட்டக்கார பெண்கள் கூறினார்கள்.

SHARE